/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ. 1.50 கோடியில் 5 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
/
ரூ. 1.50 கோடியில் 5 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ. 1.50 கோடியில் 5 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ. 1.50 கோடியில் 5 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 12, 2025 08:49 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, நல்லம்பாக்கம், குமுளி, கல்வாய் ஆகிய ஐந்து ஊராட்சிகளில், பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், சமையல் கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் நேற்று துவக்கப்பட்டன.
செங்கல்பட்டு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 61.55 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடக்க உள்ளன.
அதன்படி காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குமுளி ஊராட்சியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் 8.65 லட்சம் ரூபாய் செலவில், சமையல் கூடம் மற்றும் 7.90 லட்சம் ரூபாய் செலவில் அரங்க மேடை அமைக்கப்பட உள்ளது.
தவிர, 16 லட்சம் ரூபாய் செலவில் ஒத்திவாக்கம் பேருந்து நிறுத்தம், 15 லட்சம் ரூபாய் செலவில், கல்வாய் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், நல்லம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் ரூபாய் செலவில் நியாய விலை கடை ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மேலும், நபார்டு திட்டத்தின் கீழ் 88.90 லட்சம் ரூபாய் பணிகள் நடக்க உள்ளன. அதன்படி, காரணைபுதுச்சேரி ஊராட்சி பள்ளியில் 34.25 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு புதிய வகுப்பறைகள், கீரப்பாக்கம் ஊராட்சி பள்ளியில் 54.65 லட்சம் செலவில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
இந்த புதிய கட்டுமானங்களுக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, கூடுவாஞ்சேரி நகராட்சி சேர்மன் கார்த்திக், ஊராட்சி பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.