/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேவனேரி குடிநீர் தேவைக்கு சுத்திகரிப்பு மையம் அமைப்பு
/
தேவனேரி குடிநீர் தேவைக்கு சுத்திகரிப்பு மையம் அமைப்பு
தேவனேரி குடிநீர் தேவைக்கு சுத்திகரிப்பு மையம் அமைப்பு
தேவனேரி குடிநீர் தேவைக்கு சுத்திகரிப்பு மையம் அமைப்பு
ADDED : நவ 14, 2024 09:38 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சியின் முதல் வார்டு பகுதியாக தேவனேரி அமைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம், இப்பகுதி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நீரேற்றி, தெருக் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன், குடிநீர் உவர்ப்பாக இருந்தது. இருப்பினும், வேறு வழியின்றி இப்பகுதியினர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தற்போதைய நிலையில், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது.
எனவே, இப்பகுதியினருக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டிய அவசியம் கருதி, சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
பேரூராட்சி நிர்வாகம் அதுகுறித்து பரிசீலித்து, தன்னார்வ அமைப்பினர் வாயிலாக, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைத்து, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.