/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
/
கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2025 12:17 AM
சிங்கபெருமாள்கோவில், திருவடிசூலம் சிவன் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அகற்ற வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருவடிசூலம் கிராமத்தில், பழமையான ஞானபுரீஸ்வர் சமேத கோவர்த்னாம்பிகை கோவில் உள்ளது.
சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில், சுவாமிக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
விசேஷ நாட்களில் தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வர்.
இந்த கோவில் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரத்தில், ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் வளர்ந்து, கோபுரத்தின் உறுதித் தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
மேலும், வண்ணமயமாக இருந்த கோபுர சிற்பங்கள், தற்போது களையிழந்து காணப்படுகின்றன. இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கோவில் கோபுரத்திற்கு வண்ணம் தீட்டவும், கோபுரத்தில் உள்ள மரக்கன்றுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.