/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதல் பேருந்து இயக்க பக்தர்கள் கோரிக்கை
/
கூடுதல் பேருந்து இயக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜன 02, 2024 08:55 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த திருநிலை கிராமத்தில் ஸ்ரீபெரிய ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கிராமம் வழியாக, தடம் எண்: டி 11 என்ற அரசு பேருந்து, செங்கல்பட்டு- - மானாமதி வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து காலை, மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
மற்ற நேரங்களில் பேருந்து சேவை இல்லை. அதே நேரத்தில் திருப்போரூர், மாமல்லபுரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து நேரடி பேருந்து சேவைகளும் இல்லை.
இதனால், பக்தர்கள் இருசக்கரம், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் வருகின்றனர். அதேபோல் சுற்றுவட்டார கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பேருந்து சேவை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, திருநிலை வழியாக கூடுதல் பேருந்து வசதியும், நேரடி பேருந்து வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.