UPDATED : அக் 14, 2026 04:18 PM
ADDED : அக் 14, 2026 04:14 PM

திருப்போரூர்: அருங்குன்றம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் நேற்று, தொடங்கப்பட்டது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர் வேலன் திறந்து வைத்தார்.
இந்த சேவை மையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், பெற்றோர், பாதுகாவலர்களுக்கான பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், இலவச சிறப்புக் கல்வி உள்ளிட்ட 35 சேவைகள் வழங்கப்படுகிறது.
திருப்போரூர் சுற்றுவட்டார கிராம மக்கள், இங்கு வந்து எளிய முறையில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் அன்பரசு, மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
