தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பதிவெண் இல்லாத வாகனங்கள் அடையாளம் காண்பதில் சிக்கல்

பதிவெண் இல்லாத வாகனங்கள் அடையாளம் காண்பதில் சிக்கல்

பதிவெண் இல்லாத வாகனங்கள் அடையாளம் காண்பதில் சிக்கல்


UPDATED : நவ 17, 2026 07:57 PM

ADDED : நவ 17, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:57 PM ADDED : நவ 17, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மறைமலைநகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், பதிவெண்ணை மறைத்து இயக்கப்படும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு புறநகர் பகுதியான சிங்கபெருமாள் கோவில், சுற்று வட்டார பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

செங்கல்பட்டு - – காஞ்சிபுரம் சாலை, திருப்போரூர் - – செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட சாலைகள் உள்ளன.

இந்த சாலைகளில் நம்பர் பிளேட் இல்லாமல், வாகன பதிவு எண்கள் தெளிவாக இல்லாமல் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வாகன பதிவு எண் இல்லாததால் வாகன ஒட்டிகள் விபத்துக்களில் சிக்கும் போது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், போலீசார் வாகனங்களை எளிதில் அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us