/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் டிஜிட்டல் சர்வே பணி
/
திருப்போரூரில் டிஜிட்டல் சர்வே பணி
ADDED : நவ 28, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம், இள்ளலுார், செம்பாக்கம் உள்ளிட்ட, 50 ஊராட்சிகள் உள்ளன.
இப்பகுதிகளில், வேளாண்மைத் துறை சார்பில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விபரங்களையும், டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான சர்வே பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக இப்பணிகள் நடக்கின்றன. இதில், விவசாய நிலம், அளவு, நிலத்தின் தன்மை, சாகுபடி வகைகள், கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், வேளாண் துறை அலுவலர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேகரித்து வருகின்றனர்.