/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றத்திற்கான பரிமாண வளர்ச்சி பயிற்சி முகாம்
/
மாற்றத்திற்கான பரிமாண வளர்ச்சி பயிற்சி முகாம்
ADDED : அக் 01, 2024 07:22 PM
அச்சிறுபாக்கம்:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக, அச்சிறுபாக்கம் மகளிர் திட்ட வளாகத்தில், மாற்றத்திற்கான பரிமாணங்கள் குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
கிராமங்களில், மகளிர் திட்டத்தின் வாயிலாக, கிராமத்திற்கு ஒரு பெண் உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின், அவர்களுக்கு இயற்கை விவசாயம், பொருளாதாரம், அடிப்படை வசதி, ஆரோக்கியம், அதிகார பகிர்வு, சுத்தம் மற்றும் பசுமை, கல்வி, சமூக பாதுகாப்பு உள்ளிட்டவைகளில், கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகள் குறித்தான பயிற்சி முகாம், மகளிர் திட்ட வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில், வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் தானப்பன், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட வள பயிற்றுனர் பபிதா, விவசாய பயிற்றுனர் அருண்குமார் மற்றும் 59 ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

