sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்

/

'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்

'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்

'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் தையூர் அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்


UPDATED : செப் 07, 2025 02:07 AM

ADDED : செப் 07, 2025 02:01 AM

Google News

UPDATED : செப் 07, 2025 02:07 AM ADDED : செப் 07, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த, 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். Image 1465703

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அந்த வரிசையில், கேளம்பாக்கம் அருகே ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி உள்ள தையூர் ஊராட்சியில் உள்ள, 'விஜயசாந்தி லோட்டஸ் பாண்ட்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழுடன், 'ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா, ஹோம் கேர் ப்ரோடக்ட், டயா பூஸ்ட்டர்' ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்தன.

நேற்று மாலை 4:00 மணிக்கு கொண்டாட்டம் துவங்கியது. குடியிருப்பின் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, 500 க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், குழந்தைகளுக்காக ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற்றன.

மினி மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும், டயா பூஸ்ட்டர் நிறுவனம், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கைளை இலவசமாக வழங்கியது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளால், அப்பார்ட்மென்ட் வளாகம் இரவு 9:00 மணி வரை விழா கோலம் பூண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி எனக்கு புது அனுபவமாக இருந்தது. இங்கு நடைபெற்ற கோலம் போட்டியில் பங்கேற்றேன். தினமலர் நாளிதழின் 75 ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இங்கு ஏராளமான அரங்குகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை அளித்தன. - எஸ்.அசின், 27, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.


இங்கு நடந்த நிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. அனைவரும் ஒன்றிணைவதற்கு இந்நிகழ்ச்சி பாலமாக அமைந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில், இந்த வாய்ப்பை ஏற்படுத்திய 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. - எஸ். சுவாதி, 30, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.


இந்த மாதிரி நிகழ்ச்சி எங்கள் குடியிருப்பில் நடந்ததே இல்லை. ஆண்டும் தோறும் இந்த நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழ் நடத்த வேண்டும் என எல்லாரும் விரும்புகின்றனர். இங்கு நடந்த நிகழ்ச்சிகள், அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது. சிறுவர் - சிறுமியர் மிகவும் மகிழ்ந்தனர். - வி.சிவசுப்பிரமணி, 40, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.







      Dinamalar
      Follow us