/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தினமலர் செய்தி எதிரொலி போக்குவரத்துக்கு இடையூறு மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

ADDED : மே 20, 2025 12:28 AM

மதுராந்தகம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மதுராந்தகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, மதுராந்தகம் நகர் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலை உள்ளது.
இந்த சாலையில், மதுராந்தகம் எஸ்.பி.ஐ., வங்கி எதிரிலும், செல்வ விநாயகர் கோவில் எதிரிலும், காட்டுவாகை மரத்தின் கிளைகள் சாலையை ஆக்கிரமித்து இருந்தன.
இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த மரங்களில் காய்ந்த கிளைகளும், ஆபத்தான நிலையில் இருந்தன.
நகராட்சி நிர்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், சாலையை ஆக்கிரமித்து வளர்ந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.