UPDATED : ஆக 26, 2026 09:02 PM
ADDED : ஆக 26, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சங்கத்தின் ஒன்றிய செயலர் அருள் ராணி, மாவட்ட துணை செயலர் லிங்கன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மாற்றுதிறனாளிகளின் உதவித்தொகையை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
