ADDED : ஜன 07, 2026 06:20 AM
மதுராந்தகம்: மதுரா ந்தகம் காந்தி சிலை அருகே, 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய, பா.ஜ., அரசை கண்டித்து, சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம், நேற்று நடந்தது .
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பா துகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அச்சிறுபாக்கம் ஒன்றிய தலைவர் தயாளன் தலைமை வகித்தார்.
100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, நிதியை குறைத்து புதிய ச ட்டத்தை நிறைவேற்றியுள்ள மத்திய அரசை கண்டித்து, சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம் நடந்தது.
இச்சட்டத்தால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுபவர் என, மதுராந்தகம் ஒன்றிய தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர் வெள்ளிக்கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திற னாளிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
