/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் திருப்போரூரில் மாநாடு
/
மாற்றுத்திறனாளிகள் சங்கம் திருப்போரூரில் மாநாடு
ADDED : ஜூன் 23, 2025 11:56 PM

திருப்போரூர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், திருப்போரூர் ஒன்றிய அளவிலான 3வது மாநாடு, செம்பாக்கம் பகுதியில் நேற்று நடந்தது.
ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும். ரயில்வே பயண அட்டை, பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.
திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர பேருந்து வசதியை செய்து தர வேண்டும்.
திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, மனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.