/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சவுக்கு கட்டைகள் அனுப்பி வைப்பு
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சவுக்கு கட்டைகள் அனுப்பி வைப்பு
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சவுக்கு கட்டைகள் அனுப்பி வைப்பு
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சவுக்கு கட்டைகள் அனுப்பி வைப்பு
ADDED : செப் 14, 2025 02:22 AM

மதுராந்தகம்:அண்டவாக்கத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து, மற்ற நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சவுக்கு கட்டைகளை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடப்பாண்டு குருவை சாகுபடியில், ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்யப்பட்டது.
இதில், மதுராந்தகம் செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவு நெல் விவசாயம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
பின், மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் பகுதியில், திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், தரைப் பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டைகள் வைத்து அடுக்கி, அதன் மீது நெல் மூட்டைகளை அடுக்கினர். பின், அதன் மீது தார்ப்பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், அரவை ஆலைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அதனால், அங்கிருந்த சவுக்கு கட்டைகள் மற்றும் தார்ப்பாய்கள் தற்போது, மதுராந்தகம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் பகுதிகளுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு, ஒரு சில நாட்களுக்குள் லாரிகள் மூலமாக, சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.