/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பனையில் தகராறு: மறைமலைநகரில் 7 பேர் கைது
/
கஞ்சா விற்பனையில் தகராறு: மறைமலைநகரில் 7 பேர் கைது
கஞ்சா விற்பனையில் தகராறு: மறைமலைநகரில் 7 பேர் கைது
கஞ்சா விற்பனையில் தகராறு: மறைமலைநகரில் 7 பேர் கைது
ADDED : ஜன 02, 2026 05:10 AM
மறைமலை நகர்: மறைமலை நகர் என்.ஹெச்., -- 3 வளையாபதி தெருவில், நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் தகராறு செய்வதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மறைமலை நகர் போலீசார், அங்கு சண்டையில் ஈடுபட்ட ஏழு பேரை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், பிடிபட்ட நபர்கள் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், 25, அவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த மாயாண்டி, 21, பேச்சிதுரை, 20, மற்றும் மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்த ராகுல், 26, அவரது நண்பர்களான சென்னை வடபழனியைச் சேர்ந்த மோகன செல்வன்,19, விக்னேஷ்வரன், 28, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மனிஷ்,18, என தெரிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மறைமலை நகருக்கு வந்து தங்கி, இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், ராகுல் தரப்புடன் கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டது தெரிந்தது.
இவர்களிடம் நடத்திய சோதனையில், 1.7 கிலோ கஞ்சா சிக்கியது. அதை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட நபர்களை விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

