/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகர் நேரு பூங்கா பராமரிக்காததால் அதிருப்தி
/
மறைமலைநகர் நேரு பூங்கா பராமரிக்காததால் அதிருப்தி
ADDED : பிப் 14, 2025 01:07 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி என்.ஹெச் 3, சீவக சிந்தாமணி தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது.
சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் சிறுவர்கள், இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்குமரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி, விளையாடி வருகின்றனர்.
முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர், இங்குள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம், கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், பூங்காவில் புதர் வளர்ந்துள்ளது. மேலும், பூங்காவில் வெட்டப்பட்ட மரங்கள், அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளன.
இதன் காரணமாக, விஷ பூச்சிகளின் அச்சம் காரணமாக, குழந்தைகளை பூங்காவிற்கு அனுப்ப, பெற்றோர்கள் தயங்குகின்றனர்.
எனவே, இந்த பூங்காவை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.