/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின் அழுத்தத்தால் பெருந்தண்டலத்தில் அவதி
/
குறைந்த மின் அழுத்தத்தால் பெருந்தண்டலத்தில் அவதி
ADDED : பிப் 22, 2024 10:37 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில், கடந்த ஒருவார காலமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக அவதியடைந்து வருகின்றனர். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின் மோட்டாரை பயன்படுத்த முடியாததால், மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடிவதில்லை.
இதன் காரணமாக, ஒரு வாரமாக தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்த மின் அழுத்த பிரச்னையை சரிசெய்ய, மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.