/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது ரேஷன் கடை திறப்பு விழா புறக்கணித்த தி.மு.க., நிர்வாகிகள்
/
புது ரேஷன் கடை திறப்பு விழா புறக்கணித்த தி.மு.க., நிர்வாகிகள்
புது ரேஷன் கடை திறப்பு விழா புறக்கணித்த தி.மு.க., நிர்வாகிகள்
புது ரேஷன் கடை திறப்பு விழா புறக்கணித்த தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : ஜூலை 04, 2025 10:32 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே வெங்கலேரி கிராமத்தில், ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு, அப்பகுதி தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் வராதது, கிராமத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சி, வெங்கலேரி கிராமம், 2வது வார்டில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்த ரேஷன் கடை, 40 ஆண்டுகளுக்கு முன், சில காரணங்களால் ஆலத்துார் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால், வெங்கலேரி கிராமத்தினர் 1 கி.மீ., துாரம் சென்று, ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து, ரேஷன் பொருட்களை வாங்கி வர சிரமப்பட்டனர்.
எனவே, மீண்டும் வெங்கலேரி கிராமத்திற்கு ரேஷன் கடையை மாற்றி, சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 2023-24ம் நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.77 லட்சம் ரூபாயில், வெங்கலேரியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. அப்பகுதி வார்டு கவுன்சிலர் சாவித்திரி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி, மற்ற வார்டு கவுன்சிலர்கள் முகந்தன், இளவரசி, பாரதி, பார்த்திபன் மற்றும் பொதுமக்கள், காலை 9:00 மணிக்கே வந்திருந்தனர்.
ஆனால், ரேஷன் கடையை திறக்க சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டவர்கள், திடீரென வரவில்லை.
இதனால், மக்கள் விருப்பப்படி 2வது வார்டு கவுன்சிலர் சாவித்திரி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி ஆகியோர் ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தனர்.
தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் வராமல் இருந்தது, கிராமத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.