1 புயல், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
2 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை, இன்று வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது
3 புயல் கரையை கடக்கும்போது, இன்று பிற்பகல், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில், பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்
4 புயல் கரையை கடக்கும்போது, கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்த்து, பாதுகாப்புடன் வீடுகளில் இருப்பது அவசியம்
5 கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
6 கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, பரங்கிமலை, அரும்பாக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
7 வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் வருவதை தடுக்க, பூங்கா மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.