/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால், வேகத்தடை அமைக்க வேண்டும்
/
வடிகால், வேகத்தடை அமைக்க வேண்டும்
ADDED : நவ 12, 2025 10:31 PM

ஊ ரப்பாக்கம் ஊராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட மணிமேகலை தெரு, எம்.ஜி.நகர் - 1ல், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, மழைநீர் வடிகாலுடன் சாலை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில மாதங்களுக்கு முன், 15 அடி அகலம், 100 மீ., துாரம் உள்ள சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை.
இதனால், சாலையோரம் நீர் தேங்கி, கொசு உற்பத்தி மிகுதியாகி குழந்தைகள், வயதானோர் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். தவிர, இத்தெருவில் அதிவேகத்தில் வாகனங்கள் பயணிப்பதால், அடிக்கடி விபத்தும் நடக்கிறது.
எனவே, இத்தெருவில் வேகத்தடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ஊராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தவேலன், எம்.ஜி.முதல் தெரு, ஊரப்பாக்கம்.

