மின் பகிர்மான பெட்டியை அகற்றாமல் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய்
மின் பகிர்மான பெட்டியை அகற்றாமல் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய்
ADDED : ஏப் 05, 2026 10:04 PM

கோவிலம்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்குள்ள காமராஜர் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இத்தெருவில், நான்கு நாட்களுக்கு முன், கான்கிரீட் சாலையும், ஒரு வாரத்திற்கு முன் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலையில் உள்ள தனியார் இணைய வடம் செல்லும் மூன்று கம்பங்கள் மற்றும் வடிகால்வாயில் உள்ள மின் பெட்டியை அகற்றாமல், ஒப்பந்ததாரர்கள் இப்பணியை முடித்துள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, மின் பெட்டியால் மழை நீர் வெளியேறுவது தடைபட்டு, மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், இதை சீர்செய்து, ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, 'கோவிலம்பாக்கம், மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவற்றை அகற்றி, பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்படும்' என்றார்.
