/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தை துார்த்து நடைபாதை வேங்கைவாசலில் எதிர்ப்பு
/
குளத்தை துார்த்து நடைபாதை வேங்கைவாசலில் எதிர்ப்பு
ADDED : அக் 11, 2024 12:12 AM
சேலையூர்:வேங்கைவாசல் ஊராட்சியிலுள்ள வண்ணான் குளத்தில் கட்டட கழிவுகள் கொட்டி நடைபாதை அமைப்பதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகா, வேங்கைவாசல் ஊராட்சியில், புலம் எண் 215ல் வண்ணான் குளம் உள்ளது.
இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. இக்குளத்தில் கட்டட கழிவுகள் கொட்டி துார்த்து, சி.எம்.டி.ஏ., நிதி 20 லட்சம் ரூபாயில் நடைபயிற்சி பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
இதை தேவையில்லாத ஒன்று. இவ்வூராட்சியில் பூங்காக்களுடன் கூடிய நடைபயிற்சி பாதைகள் போதிய அளவில் உள்ளன. 'சிலரின் தேவை'யை பூர்த்தி செய்யவே இப்படி செய்கின்றனர். இப்பணிகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

