/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி அவசியம்
/
மறைமலை நகர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி அவசியம்
மறைமலை நகர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி அவசியம்
மறைமலை நகர் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி அவசியம்
ADDED : ஜன 03, 2026 05:31 AM

மறைமலை நகர்: மறைமலை நகர் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில் மறைமலை நகர் ரயில் நிலையம் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தை திருக்கச்சூர், பனங்கொட்டூர், பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் அதிகமானோர் இந்த ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கின்றனர்.
அந்த வகையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்டுத்தும் இந்த ரயில் நிலைய வளாகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
குடிநீர் மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க, ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி மறைமலை நகர் நகர பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, மறைமலை நகர் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

