/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணப்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.50 ஆயிரத்தில் குடிநீர் வசதி
/
மணப்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.50 ஆயிரத்தில் குடிநீர் வசதி
மணப்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.50 ஆயிரத்தில் குடிநீர் வசதி
மணப்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.50 ஆயிரத்தில் குடிநீர் வசதி
ADDED : மே 03, 2025 01:54 AM
செங்கல்பட்டு:மணப்பாக்கம் ஊராட்சியில், தொடக்கப்பள்ளிக்கு ஆழ்த்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யும் பணி துவங்கியது.
செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, மணப்பாக்கம், அரும்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் குடிநீர் வசதியில்லாததால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். குடிநீர் வசதி செய்துதரப்படும் என, வட்டார வளச்சி அலுவலர் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், ஆழ்த்துளை கிணறு அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆழ்ததுணை கிணறு அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் துவங்கியது. பணிகள் அனைத்தும் முடித்து, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.