/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
/
பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்
ADDED : அக் 14, 2025 12:28 AM
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு குடிநீர் வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர். வேறு வழியின்றி, கடைகளில் அதிக விலை கொடுத்து, 'கேன்' குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.
எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- --- ம.ரவீந்தர், செய்யூர்.