UPDATED : ஜூலை 01, 2026 05:08 PM
ADDED : ஜூலை 01, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருப்போரூர்:திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் குடிநீர் பரிசோதனை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் உள்ள பணியாளர்களுக்கு
குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மகளிர் குழுக்கள், துாய்மை பணியாளர்கள், ஊராட்சி செயலர் என 250 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, பயிற்சி கையேடு வழங்கப்பட்டு, குடிநீரில் உள்ள பி.எச்., மதிப்பு, காரத்தன்மை, கடினத்தன்மை, இரும்பு, அம்மோனியா போன்றவற்றை பரிசோதனை செய்யும் முறைகள், நீரை சேமித்தல் குறித்து செயல் முறை பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது.
