/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறாக்கள் இருப்பிடமான குடிநீர் கிணறு விளாங்காடு ஊராட்சியில் அவலம்
/
புறாக்கள் இருப்பிடமான குடிநீர் கிணறு விளாங்காடு ஊராட்சியில் அவலம்
புறாக்கள் இருப்பிடமான குடிநீர் கிணறு விளாங்காடு ஊராட்சியில் அவலம்
புறாக்கள் இருப்பிடமான குடிநீர் கிணறு விளாங்காடு ஊராட்சியில் அவலம்
ADDED : ஆக 14, 2025 02:39 AM

சித்தாமூர்:விளாங்காடு ஊராட்சியில், புறாக்களின் இருப்பிடமாக குடிநீர் கிணறு மாறி வருவதால், மூடி அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே விளாங்காடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் குளம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்ததால், புறாக்களின் இருப்பிடமாக மாறியது. இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்தாண்டு செப்டம்பரில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறையினர் புறாக்களை அப்புறப்படுத்தினர்.
ஆனால், தற்போது வரை கிணற்றுக்கு மேல்தளம் அமைத்து மூடியும் அமைக்கப்படாததால், குடிநீர் கிணறு மீண்டும் புறாக்களின் இருப்பிடமாக மாறி உள்ளது.
தற்போது, புறாக்களின் எச்சம் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, கிராமத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புறாக்களை அகற்றி விட்டு, குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

