/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.78.59 லட்சம் நிதியில் செங்கையில் குடிநீர் பணி துவக்கம்
/
ரூ.78.59 லட்சம் நிதியில் செங்கையில் குடிநீர் பணி துவக்கம்
ரூ.78.59 லட்சம் நிதியில் செங்கையில் குடிநீர் பணி துவக்கம்
ரூ.78.59 லட்சம் நிதியில் செங்கையில் குடிநீர் பணி துவக்கம்
ADDED : ஜூலை 30, 2025 11:13 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், 15வது நிதிக்குழு மானியத்தில், 78.59 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, குடிநீர் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு நகராட்சி ஜி.எஸ்.டி., சாலையில், அழகேசன் சாலை சந்திப்பு முதல் திருமலை தியேட்டர் வரை, புதிதாக குடிநீர் பகிர்மான குழாய் அமைக்க, 15வது நிதிக்குழு மானியமாக, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தட்டான்மலை மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவர் மற்றும் காவலர் அறை கட்டுவதற்கு, 7 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலைப்பூங்கா தெரு, படிக்கட்டு தெரு ஆகிய பகுதிகளில், புதிதாக குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பதற்கு, தலா 7 லட்சம் ரூபாயும்,
பழவேலி தலைமை நீரேற்று நிலையத்திற்கு ஜெனரேட்டர் அமைக்க, 15 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாமண்டூர், பழவேலி நீரேற்று நிலையங்களில், மின் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய, 18.59 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 78.59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்துள்ளனர். இப்பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.