UPDATED : செப் 12, 2026 07:44 PM
ADDED : செப் 12, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வல்லத்தில் ஓட்டுநர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கோபு, 50. ஓட்டுநர், இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளார். தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசித்து வந்த கோபு நேற்று காலை 10:00 மணிக்கு தனது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
