/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் இ-சேவை மையம் பகுதிவாசிகள் வலியுறுத்தல்
/
வண்டலுாரில் இ-சேவை மையம் பகுதிவாசிகள் வலியுறுத்தல்
வண்டலுாரில் இ-சேவை மையம் பகுதிவாசிகள் வலியுறுத்தல்
வண்டலுாரில் இ-சேவை மையம் பகுதிவாசிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 20, 2025 09:01 PM
வண்டலுார்:கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலுார் ஊராட்சியில், அரசின் சார்பில் இ - சேவை மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. தற்போது, 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் உட்பட பல்வேறு ஆவணங்களை புதுப்பிக்கவும், புதிதாக பெறவும், இங்கு அரசின் இ-சேவை மையம் இல்லை.
இதனால், தனியார் இ-சேவை மையங்களில் அதிக பணம் செலுத்தி, இந்த சேவையைப் பெற வேண்டி உள்ளது. எனவே, வண்டலுார் ஊராட்சியில் அரசின் சார்பில் இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.