/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செயல்முறை கிடங்கு செய்யூரில் பூமி பூஜை
/
செயல்முறை கிடங்கு செய்யூரில் பூமி பூஜை
ADDED : பிப் 20, 2025 07:44 PM
செய்யூர்:செய்யூர் பகுதியில் தண்ணீர்பந்தல் கிராமத்திற்குச் செல்லும் சாலையோரத்தில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நுகர்பொருள் வாணிப கழக செயல் முறை கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் இருந்து வரும் அரசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, இங்கிருந்து லாரிகள் வாயிலாக 200க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு, மாதந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது செயல்படும் செயல்முறை கிடங்கில், போதிய அளவு பொருட்களை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், சில இடங்களில் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகம் பாதிக்கப்படுகிறது.
கூடுதலாக புதிய செயல்முறை கிடங்கு அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக 1.70 கோடி ரூபாயில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய செயல்முறை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் தனியாருக்கு 'டெண்டர்' விடப்பட்டது.
இதையடுத்து, தற்போது செயல்படும் செயல்முறை கிடங்கிற்கு அருகே, புதிய செயல்முறை கிடங்கு அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது.