/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர்களுக்கு வீடு கட்ட பெரும்பேர்கண்டிகையில் பூமி பூஜை
/
இருளர்களுக்கு வீடு கட்ட பெரும்பேர்கண்டிகையில் பூமி பூஜை
இருளர்களுக்கு வீடு கட்ட பெரும்பேர்கண்டிகையில் பூமி பூஜை
இருளர்களுக்கு வீடு கட்ட பெரும்பேர்கண்டிகையில் பூமி பூஜை
ADDED : ஜூன் 06, 2025 09:43 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லாததால், விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு, பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நிரந்தர வீடு இல்லாமல், ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர். இதில், 10க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு, வீட்டு மனை பட்டா இல்லாமல் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், மதுராந்தகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், இருளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, 12 இருளர் குடும்பங்களுக்கு, மத்திய அரசின் 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், 5.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வீடு கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், ஒன்றிய குழு தலைவர் கண்ணன் மற்றும் ஊராட்சி தலைவர் சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்று, வீடு கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துவக்கி வைத்தனர்.