/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி தடுப்புகள் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
/
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி தடுப்புகள் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி தடுப்புகள் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி தடுப்புகள் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2025 11:17 PM

செய்யூர், சென்னை -- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கடலோர பகுதிகளின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகும். இதன் வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து,லாரி, என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து.
இதற்காக, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் லோகு கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பகுதி அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணியால் இவ்வாறு தொடர் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாற்று பாதை குறுகலாக உள்ளதால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
மாற்று பாதை உள்ள இடங்களில் மட்டும் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு இருப்பதால், வேகமாக வரும் வாகனங்கள் உடனே மாற்று பாதையை பயன்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.
மாற்று பாதை உள்ள இடங்களில் 50 மீட்டருக்கு முன் தடுப்பு அமைத்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இரவு நேரத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை மின்விளக்குள் அமைத்து வாகன ஓட்டிகளை எச்சரிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.