/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி கட்டடத்தை அகற்ற எதிர்ப்பு
/
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி கட்டடத்தை அகற்ற எதிர்ப்பு
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி கட்டடத்தை அகற்ற எதிர்ப்பு
இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி கட்டடத்தை அகற்ற எதிர்ப்பு
ADDED : மார் 12, 2024 10:49 PM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
முதலியார்குப்பம், ஓதியூர், நயினார்குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும், 90க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, பள்ளி சுற்றுச்சுவரில் இருந்து 10 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், இரண்டு பள்ளி கட்டடங்கள் அகற்றப்படும் நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பள்ளி அருகே சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளாமல், மாற்றுப் பாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறியதாவது:
நயினார்குப்பம் பகுதியில், 70 ஆண்டுகளாக அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது, இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 90 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, பள்ளியில் 10 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, பள்ளியின் பரப்பளவு 30 சென்ட் உள்ளது. இதில், 10 சென்ட் இடத்தை கையகப்படுத்தினால், பள்ளியில் இடம் பற்றாக்குறை ஏற்படும்.
மேலும், இரண்டு பள்ளி கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன. புதிய பள்ளி கட்டடம் அமைக்க போதிய இடவசதி இல்லை. இதனால், வகுப்பறை வசதி இல்லாமல், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் மாற்றுப் பாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

