/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆர்., சாலை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
/
இ.சி.ஆர்., சாலை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
இ.சி.ஆர்., சாலை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
இ.சி.ஆர்., சாலை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : அக் 17, 2024 10:14 PM
மாமல்லபுரம்:சென்னை அக்கரை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையை, 12 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
சென்னை அக்கரை - புதுச்சேரி இடையே, முன்பு கிழக்கு கடற்கரை சாலையாக இருந்தது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், இதை சுங்க கட்டண சாலையாக நிர்வகித்து பராமரித்தது.
முழுநீள சாலையும் இருவழிப் பாதையாக இருந்தது. மாமல்லபுரம் சுற்றுலா போக்குவரத்து கருதி, சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே, கடந்த 2018ல் நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.
இத்தடத்தின் மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதியை, மத்திய அரசு, அதே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றியது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுச்சேரி சாலையை, நான்குவழிப்பாதையாக தற்போது மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அக்கரை - மாமல்லபுரம் சாலை, ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை கீழிறங்கி உள்ளது.
இவ்வழியே அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் செல்கின்றனர். சைக்கிள் பந்தயம் நடக்கிறது. எனவே, போக்குவரத்து முக்கியத்துவனம் கருதி பராமரிக்க, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
கானத்துார் - நெம்மேலி இடையே 4.01 கோடி ரூபாய்; நெம்மேலி - பட்டிபுலம் இடையே, 3.87 கோடி ரூபாய்; பட்டிபுலம் - தேவனேரி இடையே, 3.90 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க, தற்போது ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.