/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.2 கோடி யானை தந்தம் கடத்தல் பெண் உட்பட எட்டு பேர் கைது
/
ரூ.2 கோடி யானை தந்தம் கடத்தல் பெண் உட்பட எட்டு பேர் கைது
ரூ.2 கோடி யானை தந்தம் கடத்தல் பெண் உட்பட எட்டு பேர் கைது
ரூ.2 கோடி யானை தந்தம் கடத்தல் பெண் உட்பட எட்டு பேர் கைது
ADDED : ஜூலை 06, 2025 02:25 AM

செங்கல்பட்டு:கடத்தல் யானை தந்தங்களை பிடித்த செங்கல்பட்டு வனத்துறையினர், அதற்கு காரணமான எட்டு பேரை நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பரனுார் சுங்கச்சாவடி அருகில், செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சுங்கச்சாவடி பகுதியில் வேகமாக சென்ற, 'ஸ்கார்பியோ' காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
காரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்கள் இருந்தன. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், எட்டு பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் ஏழு பேரும், சென்னை புழல் சிறையில் லலிதா சுரேஷையும், போலீசார் நேற்று அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, வனத்துறையினர் கூறியதாவது:
கடத்தலில் சிக்கிய எட்டு பேரில், பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் சந்திரசேகர், 61, என்பவர்தான் முக்கிய புள்ளி. இவர், 1985ல் நைஜீரியா நாட்டில் பணிபுரிந்த போது, யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டார்.
அங்கிருந்து சென்னை வந்ததும், பெரம்பூர் ஜமாலியா பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அவ்வப்போது யானை தந்தங்களை கடத்தி வந்துள்ளார்.
இவருக்கு உதவியாக அவரது உறவினர்கள் லலிதா சுரேஷ், 58, சுரேஷ் கேசவன், 57, மற்றும் விக்னேஷ், 24, ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திலும் இவர்கள் உடன் இருந்துள்ளனர்.
இவர்களுடன் கூட்டு வைத்திருந்த யானை தந்தம் விற்பனை இடைத்தரகரான திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரஷித் அஸ்லாம், 21, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 41, சாகுல் அமீது, 46, நாகப்பட்டினம் சபரிராஜன், 35, ஆகியோரையும் பிடித்துள்ளோம். இந்த இரு யானை தந்தங்களையும், திருச்சியில் ஒருவருக்கு விற்க எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.