ADDED : நவ 10, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், இருசக்கர வாகனங்கள் மோதி, முதியவர் இறந்தார்.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விஜயகுமார், 69. நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், பேரூராட்சி புதிய அலுவலகம் அருகில், ஸ்கூட்டரில் சென்றார்.
அப்போது, எதிரில் வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், விஜயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

