/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏழாண்டுகளாக எரியாத மின் விளக்குகள் வண்டலுார் மேம்பாலத்தில் விபத்து அச்சம்
/
ஏழாண்டுகளாக எரியாத மின் விளக்குகள் வண்டலுார் மேம்பாலத்தில் விபத்து அச்சம்
ஏழாண்டுகளாக எரியாத மின் விளக்குகள் வண்டலுார் மேம்பாலத்தில் விபத்து அச்சம்
ஏழாண்டுகளாக எரியாத மின் விளக்குகள் வண்டலுார் மேம்பாலத்தில் விபத்து அச்சம்
ADDED : அக் 14, 2025 12:33 AM

வண்டலுார், வண்டலுார் ரயில்வே மேம்பாலத்தில், ஏழு ஆண்டுகளாக மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகிலுள்ள ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, 2011ம் ஆண்டு, 27 கோடி ரூபாய் செலவில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு, 2012ல் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த மேம்பாலம் 7.5 மீ., அகலத்தில், தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில், 600 மீட்டர், செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்தில் 600 மீட்டர், ஜி.எஸ்.டி., சாலை -- வாலாஜாபாத் சாலை இணைப்பிற்கு இரு வழி பாதையாக, தலா 150 மீட்டர் என, மொத்தம் 1,500 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தில் வாலாஜாபாத் சாலை இணைப்பிற்கு இருவழிப் பாதையாக உள்ள தலா 150 மீட்டர் துாரமுள்ள வழித்தடத்தில் மட்டுமே, இரவில் மின் விளக்குகள் ஒளிர்கின்றன.
ஆனால், தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்திலும், செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்திலும் மின் விளக்குகள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிரவில்லை.
மின் விளக்குகள் ஒளிராததால், இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்து மற்றும் இதர அசம்பாவித அச்சத்துடன் பயணிக்கும் நிலை தொடர்கிறது.
இது குறித்து மின்வாரிய நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, மேம்பாலத்தின் அனைத்து வழித்தடத்திலும் மின் விளக்குகள் ஒளிரும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.