/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரக்கிளையில் உரசும் மின் கம்பிகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
/
மரக்கிளையில் உரசும் மின் கம்பிகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
மரக்கிளையில் உரசும் மின் கம்பிகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
மரக்கிளையில் உரசும் மின் கம்பிகள் வண்டலுாரில் விபத்து அபாயம்
ADDED : ஏப் 25, 2025 01:45 AM

வண்டலுார்:வண்டலுாரில், மரக்கிளையில் உரசிச் செல்லும் மின் கம்பிகளால் பேராபத்து நிகழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகளில், 232 தெருக்களில், 2,047 மின்கம்பங்கள் உள்ளன.
இதில், வாலாஜாபாத் செல்லும் மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலையில், சித்தி விநாயகர் கோவில் அருகே, இரண்டு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள், மரக்கிளைகளில் உரசியபடி உள்ளன.
இந்த மின் கம்பிகள் வாயிலாக, உயர் மின் அழுத்தத்துடன் மின்சாரம் செல்வதால், மரத்தின் கிளைகள் மற்றும் அடிப்பகுதியில் மின்சாரம் பாயும் வாய்ப்பு உள்ளது.
இதனால், உயிர்பலி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.