ADDED : மார் 10, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
சீ வாடி ஊராட்சி, தோப்பு தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில், மின் பெட்டி தாழ்வான உயரத்தில் உள்ளது.
தோப்பு தெரு தவிர, வேலுநாச்சியார், திருவள்ளுவர், சர்ச் தெருவில் உள்ள குழந்தைகளும், மாலை நேரத்தில் இந்த மின் கம்பம் அருகே விளையாடுகின்றனர்.
இக்குழந்தைகள், மின் பெட்டியில் தவறுதலாக கை வைத்து, அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன், குழந்தைகளுக்கு எட்டாதபடி, உயரத்தில் மின்பெட்டியை மாற்றி பொருத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கே. எஸ்தர், சீவாடி.
