/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூரில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பவுஞ்சூரில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பவுஞ்சூரில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பவுஞ்சூரில் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 02:38 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வங்கி, பள்ளிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
மேலும், பஜார் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மழைக்காலத்தில் பஜார் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறையினர், 800 மீட்டர் துாரத்திற்கு, பஜாரின் இருபுறத்திலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை, கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், கட்டுமானப் பணியின் போது சாலையில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.