ADDED : மார் 05, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பாலத்தின் தடுப்பு கட்டையில் இருந்து கீழே விழுந்த ஊழியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 49. இவர் செய்யூர் தாலுகாவில், வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று, வீராணம் வடிகால்வாய் பாலத்தின் தடுப்பு கட்டையில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பாலத்தின் அடியில் உள்ள தண்ணீரில் மூழ்கினார். இந்நிலையில், மாம்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில், ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
