/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால் பணியாளர்கள் அவதி
/
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால் பணியாளர்கள் அவதி
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால் பணியாளர்கள் அவதி
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால் பணியாளர்கள் அவதி
ADDED : ஆக 28, 2025 02:06 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால், பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக வராண்டாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின், வட்டார அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.
இக்கட்டடத்தின் ஒரு பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அதில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்கள் - 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பணியாளர்களுடன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அங்கு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு தனி அறை மற்றும் பணியாளர்களுக்கு தனியாக அறைகள் இருந்தன. மேலும், பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள் -மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை கூட்ட அரங்கில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலக கட்டடத்தில், புதிதாக பாலின வள மையம் துவங்கப்பட உள்ளது.
ஆகையால், ஏற்கனவே செயல்பட்டு வந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை காலி செய்து தரக்கோரி, மகளிர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் தற்காலிகமாக அங்கன்வாடி மைய பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவற்றுடன் கட்டடத்தின் வராண்டா பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களாக இந்த நிலை தொடர்கிறது.
இதனால், முக்கிய பதிவேடுகள், ஆவணங்கள் பாதுகாப்பதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உரிய ஆய்வு செய்து, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்து அளிக்க வேண்டும் என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.