/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தால் கண்ட இடங்களில் வீசுவது நிறுத்தம்

ADDED : செப் 14, 2025 10:34 PM
திருப்போரூர்:டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளதால், கண்ட இடங்களில் காலி பாட்டில்கள் வீசப்படுவது குறைந்துள்ளன.
திருப்போரூர் ஒன்றியத்தில், இள்ளலுார், ஆலத்துார், கொட்டமேடு, வெங்கூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன.
டாஸ்மாக்கில் மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் வனப்பகுதி, பொதுஇடங்கள், ஏரிப்பகுதி, சாலை ஓரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசுகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் 10 ரூபாய் கூடுதலாக விற்கப்பட்டு காலி பாட்டிலை மீண்டும் கடையில் கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப அளிக்கப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் கண்ட இடங்களில் பாட்டிலை வீசி செல்வதோ, உடைப்பதோ குறைந்துள்ளது.