/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழவேலி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பு
/
பழவேலி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பு
ADDED : நவ 27, 2025 04:34 AM
மறைமலை நகர், நவ. 27-
பழவேலி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பால் சாலை வசதி ஏற்படுத்த முடியாமல் உள்ளது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம்,பழவேலி ஊராட்சி, கன்னியம்மன் கோவில் தெருவில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிமக்கள் சென்று வர சர்வே எண் 86/9ல் 515 சதுர மீட்டர் பொதுப் பாதை உள்ளது. இந்த பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் 15 ஆண்டுகளாக புதிய சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கன்னியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் புதிய சாலை அமைக்க முடியாத சூழல் உள்ளது. பல முறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளிடம் மனு அளித்தும் சாலை அமைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு 1.33 லட்சம் ரூபாய் சாலை அமைக்க ஒதுக்கீடு செய்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல், இதுவரை சாலை அமைக்கவில்லை.
இதன் காரணமாக இந்த பகுதியில் அவசர கால வாகனம் கூட செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

