/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஆக 16, 2025 12:12 AM

மறைமலைநகர்:காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கோவிந்தாபுரம் - கொண்டமங்கலம் செல்லும் சாலை, 3.3 கி.மீ., துாரம் உடையது. இது திருப்போரூர் - சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையின் இருபுறமும் கருநிலம், கோவிந்தாபுரம், கொண்டமங்கலம் கிராமங்களின் காப்புக் காடுகள் உள்ளன.
இந்த காப்புக் காடுகள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த காப்புக்காடுகள் உள்ளன.
இதில் தொழிற்சாலை கழிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுநீர் உள்ளிட்டவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.
தற்போது மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி உள்ளதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

