/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியகுப்பத்தில் பழுதான ரேஷன் கடையால் அத்தியாவசிய பொருட்கள் வீணாகும் அவலம்
/
பெரியகுப்பத்தில் பழுதான ரேஷன் கடையால் அத்தியாவசிய பொருட்கள் வீணாகும் அவலம்
பெரியகுப்பத்தில் பழுதான ரேஷன் கடையால் அத்தியாவசிய பொருட்கள் வீணாகும் அவலம்
பெரியகுப்பத்தில் பழுதான ரேஷன் கடையால் அத்தியாவசிய பொருட்கள் வீணாகும் அவலம்
ADDED : செப் 09, 2025 12:43 AM

செய்யூர்,பனையூர் பெரியகுப்பத்தில் ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் பெரியகுப்பம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பனையூர் பெரியகுப்பம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இதில் 260க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை செயல் படுகிறது.
முறையான பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் கட்டடத்தின் தரை விரிசல் அடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது.
இதனால் மழைக்காலத்தில் அரிசி , சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை மழைநீரில் நனையாமல் பாதுகாக்க விற்பனையாளர்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து இடைக் கழிநாடு 6வது வார்டு கவுன்சிலர் வீரராகவன் கூறியதாவது:
பனையூர் பெரியகுப்பம் ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து, எட்டு மாதங்களுக்கு முன் வேலைக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தற்போது வரை கட்டடத்தை சீரமைக்க டெண்டர் விடப்படாமல் உள்ளது.
ஆகையால் பேரூராட்சி துறை அதிகாரிகள் பருவமழைக்கு முன் ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.