sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடலுார் கடற்கரையில் தடுப்பு அமைத்தும்... பயனில்லை � கடலரிப்பு நீடிப்பால் மீனவர்கள் அச்சம்

/

கடலுார் கடற்கரையில் தடுப்பு அமைத்தும்... பயனில்லை � கடலரிப்பு நீடிப்பால் மீனவர்கள் அச்சம்

கடலுார் கடற்கரையில் தடுப்பு அமைத்தும்... பயனில்லை � கடலரிப்பு நீடிப்பால் மீனவர்கள் அச்சம்

கடலுார் கடற்கரையில் தடுப்பு அமைத்தும்... பயனில்லை � கடலரிப்பு நீடிப்பால் மீனவர்கள் அச்சம்


ADDED : டிச 26, 2024 12:54 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார், கடலுார் மீனவ பகுதி கடலரிப்பை தடுக்க, தடுப்பு அமைக்கப்பட்டும், பயனின்றி கடலரிப்பு நீடிக்கிறது. மீனவ வசிப்பிட பகுதி அழியாமல் பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கூவத்துார் அடுத்த, கடலுார் ஊராட்சியில், சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய மீனவர் பகுதிகள், 2 கி.மீ., தொலைவிற்குள் உள்ளன.

இப்பகுதியில் நீண்ட காலமாக, கடலரிப்பு ஏற்பட்டு, இப்பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. கடற்கரை மணல்வெளி அழிந்து, படகுகள் நிறுத்த இடம் இல்லை. வசிப்பிடபகுதி, கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. பெரியகுப்பத்தில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளம், கடலில் மூழ்கும் சூழலும் ஏற்பட்டது.

எனவே, கடலரிப்பை தடுக்க முடிவெடுத்த மீன்வளத்துறை, மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் இயங்கும், தேசிய கடலோர ஆய்வு நிறுவனத்திடம், 20 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தும் பொறுப்பைஒப்படைத்தது.

கடலின் அடியில்,'டைக்' எனப்படும், மணல் அணை அமைப்பை, நவீனதொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, அந்நிறுவனம் அமைத்தது. தலா 25 மீ., நீளம் உள்ள ஜியோ சிந்தடிக் டியூப்களில், சுத்திகரிப்பு மணல் நிரப்பி, கடலில் 400 மீ., ஆழ பகுதியில், குறிப்பிட்ட இடைவெளியுடன், 2 கி.மீ., நீளத்திற்கு நிலைநிறுத்தி, அணை உருவாக்கப்பட்டது.

ராட்சத அலைகள், சீற்றத்துடன் கரைக்கு விரையும்போது, இடையில் அணையில் மோதி, சீற்றம் கட்டுப்பட்டு கரையை அடைவதால், கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படாது என்பதே, இத் தொழில்நுட்பம்.

கடந்த 2016ல் பணி துவங்கி 2019ல், முடிந்தது. துவக்கத்தில் மணல் அணை காரணமாக,கடலரிப்பு ஓரளவுகட்டுப்பட்டது.

ஒரே ஆண்டில், கடலில்அமைக்கப்பட்ட ஜியோ டியூப்கள் சீரழிந்தன. அதில், கடலில் உள்ள பருத்த மணலை நிரப்பாமல், கடற்கரையில் உள்ள சிறுமணலே நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. டியூப்பிலிருந்து மணல் வெளியேறி, தரையோடு தரையாக குழாய் படிந்து வீணானது.

இந்நிலையில் மீண்டும் கடலரிப்பு உருவாக துவங்கி, மீண்டும் கடற்கரையை அழித்தது. வடகிழக்கு பருவமழை புயல் காலத்தில் கடலரிப்பு அதிகமாக உள்ளது. நிரந்தரமாக கடலரிப்பை தடுத்து, மீனவ பகுதியை பாதுகாக்க, அரசிடம் மீனவர்கள் தொடர்ந்துவலியுறுத்தினர்.

இதையடுத்து, மூன்று மீனவ பகுதிகளை ஒருங்கிணைத்து, ஓராண்டிற்குமுன், 30 கோடி ரூபாய் மதிப்பில், நேர்கல் தடுப்பு,ஆலிகுப்பத்தில் மீன்இறங்குதளம் எனஅமைக்கப்பட்டன.

சின்னகுப்பம், ஆலிகுப்பம் பகுதியில், கடலரிப்பு ஓரளவு கட்டுப்பட்டுள்ளது. ஆனால், பெரியகுப்பத்தில் கடலரிப்பு தொடர்ந்து நீடிக்கிறது. அங்குஏற்கனவே கடலரிப்பால் சேதமடைந்த மீன் இறங்குதளத்தில் அலைகள் சீற்றத் துடன் மோதி, மேலும் உருக்குலையும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர் கூறியதாவது:

இப்பகுதியில் கடலரிப்பை தடுக்க, துாண்டில் வளைவு அமைக்கவே, நீண்டகாலமாக வலியுறுத்தினோம். அதை அமைத்தால், அரிப்புநிச்சயம் தடுக்கப்படும். இவ்வளைவு நிலையாகவும் இருக்கும்.

ஆனால், மீன்வளத்துறை ஏற்பாட்டில், ஓஷன் டெக்னாலஜி நிறுவனம், 'டைக்' அமைத்தது.அது பயனளிக்காமல் வீணானது.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள நேர்கல் தடுப்பும், கடலரிப்பை தடுக்கவில்லை. அரிப்பு தீவிரமாக உள்ளது. நிரந்தரதீர்வு காண, அரசு ஆய்வு செய்து செயல்படுத்தவேண்டும்.

மீன்இறங்குதளத்தில் உள்ள சேதமடைந்த கட்டடங்களை இடிக்குமாறு, முந்தைய கலெக்டர்அறிவுறுத்தியும் இடிக்கப்படவில்லை. அவற்றை இடித்து, புதிய கூடங்கள் கட்டுவதற்கு, கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us