/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழப்பும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை 300 மீ., துாரத்திற்குள் 'யு டர்ன்' அமைக்க எதிர்பார்ப்பு
/
குழப்பும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை 300 மீ., துாரத்திற்குள் 'யு டர்ன்' அமைக்க எதிர்பார்ப்பு
குழப்பும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை 300 மீ., துாரத்திற்குள் 'யு டர்ன்' அமைக்க எதிர்பார்ப்பு
குழப்பும் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை 300 மீ., துாரத்திற்குள் 'யு டர்ன்' அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 31, 2025 06:01 AM

வண்டலுார்: வண்டலுாரிலிருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில், வழி தவறி செல்லும் வாகன ஓட்டிகள் உடனடியாக திரும்பும்படி, முதல் 300 மீட்டர் துாரத்திற்குள், 'யு டர்ன்' திருப்பம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் வாகன ஓட்டிகள் பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக செல்ல, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., நீளமுள்ள வெளிவட்ட சாலை அமைக்கப்பட் டுள்ளது.
வண்டலுார் உயிரியில் பூங்கா எதிரே தொடங்கும் இந்த வெளிவட்ட சாலையின் துவக்க பகுதி, புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு கடும் குழப்பத்தை தருகிறது.
வீணடிப்பு
இதனால், புதிதாக சென்னை வரும் வாகன ஓட்டிகளில் பலர், தாம்பரம் நோக்கி செல்வதற்கு பதிலாக, மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணித்து, நேரத்தை வீணடிக்கும் சூழல் நிலவி வருகிறது.
இப்படி கவனக் குறைவாக மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், உடனடியாக சுதாரித்து மீண்டும் தாம்பரம் நோக்கி செல்ல, முதல் 300 மீ., துாரத்திற்குள் எச்சரிக்கை பலகை, 'யு டர்ன்' திருப்பம் போன்ற எதுவும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் பலர் நீண்ட துாரம் சுற்றிச் சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், முதல் 300 மீட்டர் துாரத்திற்குள் எச்சரிக்கை பலகையும், 'யு டர்ன்' திருப்பமும் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கேளம்பாக்கம் -- வண்டலுார் சாலை மற்றும் செங்கல்பட்டு -- வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை வழியாக செ ன்னை, தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு, வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில் உள்ள வழித்தட ங்கள் பெரும் குழப்பமாக உள்ளன.
செங்கல்பட்டிலிருந்து தாம் பரம் நோக்கி செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே உள்ள பாலத்தில் பயணித்தால், தாம்பரம் நோக்கி குழப்பமின்றி செல்லலாம்.
ஒருவேளை இவர்கள் அந்த பாலத்தில் பயணிக்க முடியாதபடி அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் நிலவினால், பாலத்தின் இடது பக்கம் உள்ள சாலையில் தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர். அப்போது, 100 மீ., துாரத்தில் மீண்டும் ஒரு பாலம் துவங்குகிறது.
அந்த பாலத்தின் இடது பக்கம் அணுகுசாலை உள்ளது. இந்த அணுகு சாலை தான் தா ம்பரம் நோக்கிச் செல்கிறது.
வழித்தடம்
ஆனால், புதிதாக சென்னை வரும் வாகன ஓட்டிகளுக்கு, இந்த இடம் குழப்பத்தை தருகிறது.
இதனால் பெரும்பாலானோர், இடது பக்கம் உள்ள அணுகு சாலையில் பயணிப்பதற்கு பதிலாக, வலது பக்கம் உள்ள பாலத்தில் வாகனத்தை இயக்குகின்றனர்.
ஆனால், இந்த வழித்தடம் வண்டலுார் -- மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
இதனால், வெளிவட்ட சாலையில் பல கி.மீ., துாரம் சென்ற பின்னரே, இந்த வழித்தடம் தாம்பரம் செல்லாது என்பதை உணர்கின்றனர்.
இப்படி தவறாக வெளிவட்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் தவறை துவக்கத்திலேயே சுட்டிக்காட்டி, 300 மீ., துாரத்திற்குள் இவர்கள் மீண்டும் தாம்ப ரம் நோக்கிச் செல்லும்படி, வெளிவட்ட சாலையில், 'யு டர்ன்' திருப்பம் இல்லை.
இதனால், தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய புதிய வாகன ஓட்டிகள், வெளிவட்ட சாலையில் பல கி.மீ., துாரத்தை கடந்து, அதன் பின் சுங்கச்சாவடியில் பணம் செலுத்தி, அங்கிருந்து 'யு டர்ன்' எடுத்து, தாம்பரத்திற்கு திரும்புவதால், ப ணம் மட்டுமின்றி நேரமும் விரயமாகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது.
எனவே , வண்டலுார் -- மீஞ்சூர் வெ ளிவட்ட சாலை துவங்கும் இடத்தில், 'தாம்பரம் செல்வோர், இடது பக்கம் உள்ள அணுகு சாலையில் பயணிக்கவும்' என்ற அறிவிப்பு பலகையை, பெ ரிய அள வில் வைக்க வேண்டும்.
தவி ர, எதையும் கவனிக்காது வெளிவட்ட சாலையில் ப யணிப்போர், சில நொடிகளில் தங்கள் அறியாமையை உணர்ந்து, தாம்பரம் திரும்பிச் செல்ல, 300 மீட்டர் து ாரத்திற்குள் 'யு டர்ன்' திருப்பம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

