/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
/
அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 18, 2024 03:05 AM

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை செல்லும் மார்க்கத்தில், சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கி சென்று வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு, பேருந்து பயணியர் காயமுற்றனர்.
இதை தவிர்க்கும் விதமாக, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, பயணியர் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
பயணியர் நிழற்குடை அமைக்க, நிலத்தின் உரிமையாளர் ஆட்சேபனை தெரிவித்ததால், கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு, 100 மீட்டர் துாரம் தள்ளி, மாற்று இடத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்று இடத்திலும் பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயிலில் நின்று பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, மாற்று இடத்தில் நிழற்குடை அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

